சனி, அக்டோபர் 24, 2026
உண்மையின் குரல்
அரசியல்

வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து நீடிக்கும் கேள்விகள்: அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியிட கோரிக்கை!

வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து நீடிக்கும் கேள்விகள்: அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியிட கோரிக்கை!

 

சுமார் 45 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அவரது உடல்நிலை தொடர்பாக தினமும் மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்தத் தகவல் இடைவெளி காரணமாக அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில், தேவையற்ற வதந்திகளுக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களுக்கும் இடமளிக்காமல், வி.எஸ். பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய அதிகாரப்பூர்வ விளக்கத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.