உரிமையாளரின் குரலை அடையாளம் காணும் பூனைகள்! ஆய்வில் சுவாரஸ்ய தகவல்!

பூனைகளுக்கும் மனிதர்களின் குரல்களை அடையாளம் கண்டு வேறுபடுத்திப் புரிந்துகொள்ளும் திறன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தங்களுடன் தொடர்ந்து நேரம் செலவிடும் உரிமையாளரின் குரலையும், புதிதாகக் கேட்கும் மற்றவர்களின் குரல்களையும் பூனைகளால் தனித்தனியாக அடையாளம் காண முடியும் எனக் கூறப்படுகிறது.
உரிமையாளர் பெயர் சொல்லி அழைக்கும்போது, பூனைகள் காதுகளைத் திருப்புவது, வாலை அசைப்பது அல்லது உடல் அசைவுகள் மூலம் தங்களது எதிர்வினையை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், நாய்களைப் போல அழைத்தவுடன் ஓடிவந்து பதிலளிக்கும் பழக்கம் அவற்றிடம் இல்லாமல் இருக்கலாம்.
இதனால் பூனைகளுக்கு உரிமையாளரின் குரல் புரியவில்லை என்று அர்த்தமல்ல. மனிதர்களின் குரலை அடையாளம் கண்டுகொண்டாலும், அதற்கு எப்போது, எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதைத் தங்களது இயல்பான குணத்திற்கு ஏற்ப வெளிப்படுத்துகின்றன என்பதே இதன் சுவாரஸ்யமான அம்சமாகும்.




கருத்துகள் (0)