காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கிறீர்களா? உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை!

காலையில் தூங்கி எழுந்தவுடன் ஒரு கப் டீ குடிப்பதை பலரும் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். தூக்கத்திலிருந்து எழுந்ததும் டீ குடித்தால்தான் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் சிலருக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
டீயில் உள்ள கஃபைன் காரணமாக வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏற்கெனவே செரிமானப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் வயிற்று அசௌகரியம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
மேலும், கஃபைனுக்கு அதிக உணர்திறன் கொண்ட சிலருக்கு வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பதற்றம், படபடப்பு மற்றும் இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றக்கூடும்.
எனவே, காலையில் எழுந்தவுடன் உடனடியாக டீ குடிப்பதைத் தவிர்த்து, முதலில் தண்ணீர் குடித்து, சிறிதளவு உணவு உட்கொண்ட பிறகு டீ அருந்துவது நல்லது. குறிப்பாக அசிடிட்டி மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்தப் பழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.




கருத்துகள் (0)