உத்தரப் பிரதேசத்தில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் அருகே உள்ள கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் பலத்த சேதமடைந்து உருக்குலைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சௌரப் உபாத்யாய் (40), அவரது மனைவி மேனகா (35), மகன்கள் வோம் (7), சிவம் (18 மாதங்கள்) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாய் தூஜ் மற்றும் சத் பூஜை கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ఘోర రోడ్డు ప్రమాదం.. ఒకే కుటుంబానికి చెందిన 4గురు మృతి ఉత్తరప్రదేశ్లోని హర్దోయ్ సమీపంలో గంగా ఎక్స్ప్రెస్వేపై ఘటన ఓవర్స్పీడ్ కారణంగా.. అదుపు తప్పి డివైడర్ను డీకొట్టిన ఓ కారు ప్రమాద తీవ్రత ధాటికి.. తునాతునకలైన వాహనం కారులో ప్రయాణిస్తున్న నలుగురు అక్కడికక్కడే దుర్మరణం మృతులు సౌరభ్ ఉపాధ్యాయ్(40), భార్య మేనక(35), కుమారులు వ్యోమ్(7), శివోమ్(18 నెలలు)లుగా గుర్తింపు భాయ్ దూజ్, ఛత్ పూజ వేడుకల కోసం స్వస్థలానికి వెళ్తుండగా జరిగిన ప్రమాదం
— PulseNewsBreaking (@pulsenewsbreak) November 12, 2026




கருத்துகள் (0)