வீட்டுக்குள் மொபைல் சிக்னல் கிடைக்கவில்லையா? இதோ 3 எளிய தீர்வுகள்!

வீட்டிற்குள் இருக்கும்போது மொபைலில் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் அழைப்புகள் துண்டிக்கப்படுவது, பேசும்போது குரல் தெளிவாகக் கேட்காதது போன்ற பிரச்சினைகளை பலரும் சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற நெட்வொர்க் சிக்கல்களைச் சரிசெய்ய சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
முதலில், மொபைலில் ஏரோபிளேன் மோடை இயக்கி சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும் அணைப்பதன் மூலம் நெட்வொர்க் இணைப்பைப் புதுப்பிக்கலாம். அடுத்ததாக, உங்கள் மொபைலில் வைஃபை காலிங் வசதி இருந்தால் அதைச் செயல்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம். மூன்றாவதாக, மொபைல் நெட்வொர்க் அமைப்புகளை ரீசெட் செய்வதுடன், வீட்டின் ஜன்னல் அல்லது திறந்தவெளிப் பகுதிக்கு அருகில் நின்று பேசுவதும் சிக்னல் பிரச்சினையைக் குறைக்க உதவும்.




கருத்துகள் (0)