91 வயதில் தாயார் மறைவு.. இறுதிச் சடங்கில் தாயின் உடலை தோளில் சுமந்த யோகி ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி, 91 வயதில் காலமானார். உத்தரகண்ட் மாநிலம் பஞ்சூரில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், தனது தாயின் உடலை யோகி ஆதித்யநாத் தோளில் சுமந்து சென்றார். தாயின் மறைவு அவருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இறுதிச் சடங்குகளில் நேரில் பங்கேற்று தனது கடமைகளை நிறைவேற்றினார்.
வெள்ளிக்கிழமை உயிரிழந்த தனது தாயாருக்கு யோகி ஆதித்யநாத் எக்ஸ் தளத்தில் உருக்கமான அஞ்சலியை பதிவிட்டிருந்தார். தாயின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்திகளை வெளியிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யோகி ஆதித்யநாத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் (0)