பிக்பூட் குறித்த அரசு ஆவணங்கள் வெளியீடு.. பிரம்மாண்ட கால்தடங்கள், மர்ம சத்தங்கள் பற்றிய தகவல்கள்!

அமெரிக்காவில் மர்ம உயிரினமாகக் கருதப்படும் பிக்பூட் (Bigfoot) தொடர்பான பழைய அரசு ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காடுகளில் இந்த உயிரினம் தென்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள், பிரம்மாண்டமான கால்தடங்கள் மற்றும் விசித்திரமான சத்தங்கள் குறித்த பதிவுகள் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1982ஆம் ஆண்டு வாஷிங்டன் மாநிலத்தின் வனப்பகுதியில் கண்டறியப்பட்ட சுமார் 15 அங்குல நீளமுள்ள மிகப்பெரிய கால்தடங்கள் தொடர்பான ஆய்வுகளும் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. அந்த தடங்களின் அமைப்பு மற்றும் நுணுக்கங்களை செயற்கையாக உருவாக்குவது கடினம் என உயிரியலாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மொன்டானா வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற ஒருவர் கடுமையான துர்நாற்றத்தை உணர்ந்ததுடன், மர்மமான முனகல் சத்தங்களையும் கேட்டதாக அளித்த தகவல்களும் பதிவாகியுள்ளன. இத்தகைய சம்பவங்கள் பிக்பூட் இருப்பதாக நம்புவோரின் ஆர்வத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த உயிரினம் உண்மையில் உள்ளதா என்பது குறித்த அறிவியல் ஆதாரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.




கருத்துகள் (0)