சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ஆட்சிக் கவிழ்ப்பு அச்சம்.. மகாபலிபுரம் ரிசார்ட்டில் தவெக எம்எல்ஏக்களை சந்தித்த விஜய்!

ஆட்சிக் கவிழ்ப்பு அச்சம்.. மகாபலிபுரம் ரிசார்ட்டில் தவெக எம்எல்ஏக்களை சந்தித்த விஜய்!

தவெக எம்எல்ஏக்கள் சிலர் கட்சி மாறத் தயாராக இருப்பதாக திமுக மூத்த தலைவர் ரகுபதி தெரிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் சந்தித்ததாக நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ரிசார்ட்டில் நடைபெற்ற சந்திப்பின்போது, எம்எல்ஏக்களிடம் அவர்களின் தனிப்பட்ட குறைகள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்து விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், ஆட்சியை பாதுகாப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சந்திப்பின் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.