புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“முதல்வராக விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார்; மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை!” – அப்பாவு கடும் விமர்சனம்!

“முதல்வராக விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார்; மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை!” – அப்பாவு கடும் விமர்சனம்!

 

 

தமிழகத்தில் மின்தட்டுப்பாடு தொடர்பாக தவெக அரசை முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வராக விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார்; நாட்டு மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்குவது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அப்பாவு, மின்சாரத் தேவையை முறையாகத் திட்டமிட்டு கையாளத் தவறியதால் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார். மின்சாரக் கொள்முதல் தொடர்பான அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.