சென்னை – தூத்துக்குடி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. பயணிகளுக்கும் மகிழ்ச்சி..!!
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை தாம்பரம் – தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. விடுமுறை காலங்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




