படித்ததில் பிடித்தது: அந்த கால உறவினர்கள்..!! இந்த கால உறவினர்கள்..!!
முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா... "தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?" "அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் எல்லா நல்லாருக்கிங்களா..?" "எல்லா நல்லா இருக்கோம் சாமீ. கைய கழுவிட்டு வா.




