ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

13 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஓட்டல் உரிமையாளர் கைது!

13 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஓட்டல் உரிமையாளர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சென்னித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (52), கீரிப்பாறை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று 13 வயது சிறுவன் ஒருவர் உணவு வாங்குவதற்காக அவரது ஓட்டலுக்குச் சென்றுள்ளார்.

அப்போது ஓட்டலில் ஊழியர்களோ, வாடிக்கையாளர்களோ இல்லாத சூழலைப் பயன்படுத்திக்கொண்ட ரமேஷ்குமார், சிறுவனை ஓட்டலின் மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் வீட்டிற்குத் திரும்பியபோது, அவனது நிலையைப் பார்த்துப் பெற்றோர் சந்தேகமடைந்துள்ளனர். தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்தபோது, ஓட்டலில் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓட்டல் உரிமையாளர் ரமேஷ்குமாரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.