ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.10 குறைப்பு – ரூ.70 ஆக நிர்ணயம்!

முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.10 குறைப்பு – ரூ.70 ஆக நிர்ணயம்!

 

நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் சுமார் 8 கோடி முட்டைக்கோழிகள் மற்றும் கறிக்கோழிகள் வளர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோழி விலை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இதுவரை கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழியின் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், முட்டைக்கோழியின் விலை கிலோ ரூ.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், முட்டையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.