2ஆவது முதலீட்டாளர் மாநாடு.. ரூ.58,214 கோடி முதலீடு, 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (நவ.25) நடைபெற்ற 2ஆவது வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழகத்திற்கு ரூ.58,214 கோடி புதிய முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.1.75 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)