சிவகங்கையில் பட்டப்பகலில் விவசாயியை ஓட ஓட விரட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்!

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே பட்டப்பகலில் விவசாயி ஒருவர் மர்ம கும்பலால் விரட்டிச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைவீதிக்குச் சென்ற விவசாயி மகேஸ்வரன் (40) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கொண்ட கும்பல் திடீரென பின்தொடர்ந்து விரட்டியதாக கூறப்படுகிறது. தப்பிக்க ஓடிய அவரை அந்த கும்பல் தாக்கி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேஸ்வரனை கொலை செய்தவர்கள் யார், கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)