தவெக ஆட்சியை கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் முயற்சி என வைகோ குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை முடக்கவும், கவிழ்க்கவும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் முயற்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வைகோ, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சில அதிகாரிகள் அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறினார்.
இதற்கு காரணம், முன்பு வழக்கமாக கிடைத்து வந்த மாமூல் பணம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அதிருப்தியடைந்த சில அதிகாரிகள் அரசை சீர்குலைக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் யார் என்பது தனக்குத் தெரியும் என்றும், அவர்களின் பெயர்களை தற்போதைக்கு வெளியிட விரும்பவில்லை என்றும் வைகோ கூறினார். மேலும், தவெக ஆட்சியை முடக்குவதற்கான இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.




கருத்துகள் (0)