பெண் ஐஏஎஸ் அதிகாரி விவகாரம்.. தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் உதயநிதி புகார்!

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.25) காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், புகார் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தனது புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




கருத்துகள் (0)