புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. மதுரை ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி முறையீடு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. மதுரை ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி முறையீடு!

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது. அப்போது, தீபத்தூணில் விளக்கேற்றப்படும் எனக் கூறி நீதிமன்றத்தை ஏமாற்றியதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

 

மேலும், நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு வலியுறுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.