40 நாட்களுக்கும் மேலாக ICU-வில் வி.எஸ்.பாபு – உடல்நிலை குறித்து வெளிப்படையான தகவல் வெளியிட கோரிக்கை!

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகாததால், பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
வி.எஸ்.பாபு விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அமைச்சர் மற்றும் சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை குறித்த விரிவான விவரங்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
குறிப்பாக, அவருக்கு எக்மோ (ECMO) கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எனினும், இந்தச் சிகிச்சை தொடர்பாக அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை.
நீண்ட நாட்களாகத் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து நிலவும் சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் கவலையைப் போக்கும் வகையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்த நம்பகமான தகவல்களை வெளியிட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)