தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக நாளை மக்களவையில் 3 மசோதாக்கள் தாக்கல்!

நாடாளுமன்ற மக்களவையின் சிறப்பு அமர்வு நாளை (நவ.30) காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த அமர்வில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த 3 மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அரசியலமைப்பின் 132-வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை (2-வது) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு, தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொகுதி எல்லைகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாக்கள் தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)