ஓமலூர் பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறல்.. இளைஞருக்கு தர்ம அடி!

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தாயாருடன் பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணியிடம், மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்ணிடம் இளைஞர் தவறாக நடந்து கொண்டதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆத்திரமடைந்து, அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் இருந்த அந்த இளைஞரை மீட்டு தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.




கருத்துகள் (0)