புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
உலகம்

விளம்பரத் துண்டு ஒட்டிய பெண்ணை துன்புறுத்திய நபர் வேலையிழப்பு 10 மில்லியன் பார்வைகளை கடந்த வீடியோ!

விளம்பரத் துண்டு ஒட்டிய பெண்ணை துன்புறுத்திய நபர் வேலையிழப்பு 10 மில்லியன் பார்வைகளை கடந்த வீடியோ!

அமெரிக்காவின் நியூயார்க் நகர புரூக்ளின் பகுதியில் தனது குழந்தை பராமரிப்பு தொழிலை மேம்படுத்துவதற்காக விளம்பரத் துண்டுகளை ஒட்டிக்கொண்டிருந்த 24 வயது பெண் மவேனா டாஃபாவை, ஒருவர் பின்தொடர்ந்து சென்று தகராறில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது தொழில் தொடர்பான விளம்பரங்களை ஒட்டிக்கொண்டிருந்த மவேனாவிடம், அந்த நபர் சட்டவிதிகளை மீறுவதாகக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி, அவர் காவல்துறையினரையும் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணை தொடர்ந்து கேள்வி கேட்டு துன்புறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது.

 

கடந்த நவம்பர் 19ஆம் தேதி மவேனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ, 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது. இதையடுத்து, அந்த நபரின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் பணிபுரிந்த சிஎம்ஐ மீடியா குரூப் நிறுவனம், அனைவரும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு அவரை வேலையிலிருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நியூயார்க் நகர விதிகளின்படி, பொது இடங்களில் உரிய அனுமதியின்றி சுவரொட்டிகள் அல்லது விளம்பரத் துண்டுகளை ஒட்டினால் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தில் மவேனா மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிறு தொழில் செய்பவர்களிடம் பொது இடங்களில் நடந்துகொள்ளும் விதம் மற்றும் தனிநபர் மரியாதை தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.