தமிழகத்தில் டிசம்பர் 2 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள், தென் தமிழகப் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யக்கூடிய பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து அதற்கேற்ப தங்களது பயணங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




கருத்துகள் (0)