ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
உலகம்

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்ற ஆந்திர இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்ற ஆந்திர இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் எதிர்பாராதவிதமாக நீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டம், கடியம் மண்டலம், துல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவா (27). உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற இவர், அங்கு எம்.எஸ். பட்டப்படிப்பை முடித்த பின்னர் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தவறி நீரில் விழுந்த கேசவா, நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே கல்வியை முடித்து அமெரிக்காவில் பணியாற்றி வந்த கேசவாவின் திடீர் மரணச் செய்தி, அவரது சொந்த கிராமத்திலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.