ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
உலகம்

பெண்களின் பெயர்களுக்கு பதிலாக விலங்குகளின் பெயர்களை பயன்படுத்த தலிபான் அரசு உத்தரவு!

பெண்களின் பெயர்களுக்கு பதிலாக விலங்குகளின் பெயர்களை பயன்படுத்த தலிபான் அரசு உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடையாளம் மற்றும் உரிமைகள் தொடர்பாக மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தில் அரசு ஆவணங்களில் பெண்களின் பெயர்களை குறிப்பிட தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சுகாதாரத்துறை மற்றும் அரசு அலுவலகங்களின் பதிவுகளில் பெண்களின் பெயர்களை எழுதுவதற்குப் பதிலாக, ஆடு, மாடு அல்லது ‘பீபி’ என்ற வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என ஒழுக்கநெறி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை பெண்களின் தனிப்பட்ட அடையாளத்தை மறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இந்த உத்தரவு பால்க் மாகாணத்தில் மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் முழுவதும் விரிவுபடுத்தப்படலாம் என்ற அச்சம் மனித உரிமை அமைப்புகளிடையே ஏற்பட்டுள்ளது. பெண்களின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை அரசு பதிவுகளில் இருந்து நீக்கும் முயற்சிகள் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.