வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அனைத்து ரயில் நிலையங்களிலும் பேட்டரி கார் வசதி! 6 மாதங்களுக்குள் ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

அனைத்து ரயில் நிலையங்களிலும் பேட்டரி கார் வசதி! 6 மாதங்களுக்குள் ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த 6 மாதங்களுக்குள் பேட்டரி கார் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் பிளாட்பாரங்களுக்கு சென்று வருவதில் சிரமங்களை எதிர்கொள்வதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு விசாரணையின்போது, ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போரிடம் சுங்கக் கட்டணமும் பெறப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களிடம் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஏன் அலட்சியம் காட்டப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

இதனைத் தொடர்ந்து, திருச்சி மற்றும் மதுரை மண்டலங்களுக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆறு மாதங்களுக்குள் பேட்டரி கார் சேவையை ஏற்படுத்தி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால் ரயில் பயணிகள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.