மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் 500 சவரன் கொள்ளை! முகமூடி அணிந்த நபருக்கு போலீசார் வலை!

மதுரையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நகைக்கடையில் சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள டாடா நிறுவனத்தின் தனிஷ்க் நகைக்கடையில் நேற்றிரவு இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த சுமார் 500 சவரன் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக நகைக்கடைக்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார், அவர் எவ்வாறு கடைக்குள் புகுந்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையனைப் பிடிக்கத் தேடுதல் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)