வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள்! 200 குடும்பங்கள் அதிர்ச்சி!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள்! 200 குடும்பங்கள் அதிர்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள பன்னீர்வெளி கிராமத்தில், பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது மனிதக் கழிவுகள் கொட்டப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நீர்த்தேக்கத் தொட்டியை அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தொட்டியின் மீது மனிதக் கழிவுகள் கிடப்பதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினரும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்களின் குடிநீர் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

 

இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிராம மக்களின் புகாரின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.