ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அதிமுக ஆட்சியில் விதைத்த விதைகள் இன்று விருட்சமாகின்றன – சென்னை மெட்ரோ திட்டம் குறித்து இபிஎஸ் பெருமிதம்!

அதிமுக ஆட்சியில் விதைத்த விதைகள் இன்று விருட்சமாகின்றன – சென்னை மெட்ரோ திட்டம் குறித்து இபிஎஸ் பெருமிதம்!

 

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் வடபழனி–பூந்தமல்லி வழித்தடத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வளர்ச்சியில் அதிமுக ஆட்சியின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, அதிமுக ஆட்சிக் காலத்திலேயே பணிகள் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இன்றைய வளர்ச்சிக்கு அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளே அடித்தளமாக அமைந்ததாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் விதைத்த விதைகள் இன்று விருட்சமாகின்றன” எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.