ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 83,806 பக்தர்கள் தரிசனம் – உண்டியல் காணிக்கை ரூ.3.17 கோடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 83,806 பக்தர்கள் தரிசனம் – உண்டியல் காணிக்கை ரூ.3.17 கோடி!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 17ஆம் தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், ஒரே நாளில் 83 ஆயிரத்து 806 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வருகை தந்ததால், கோயில் வளாகம் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, நேர ஒதுக்கீட்டு டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அன்றைய தினம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடியே 17 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் 34 ஆயிரத்து 449 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

அதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புகழ்பெற்ற லட்டு பிரசாதமும் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 73 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகை, உண்டியல் காணிக்கை, தலைமுடி காணிக்கை மற்றும் லட்டு விற்பனை உள்ளிட்ட விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.