செவ்வாய், அக்டோபர் 20, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

செஞ்சியில் 7 வயது சிறுமி மாயம்: 9-வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

செஞ்சியில் 7 வயது சிறுமி மாயம்: 9-வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

 

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தனது பிறந்தநாளன்றே மாயமான 7 வயது சிறுமியை மீட்கக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறுமி காணாமல் போய் 9 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரைப் பத்திரமாக மீட்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையே, சிறுமி மாயமான பகுதியில் பதிவான 600-க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை சைபர் கிரைம் பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் துப்பு துலக்கி வரும் நிலையில், இதுவரை சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.