செங்கல்பட்டில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், வரும் நவம்பர் 27ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி முடித்த, 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தெரிவித்துள்ளார். வேலை தேடும் தகுதியுடைய இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.




கருத்துகள் (0)