திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசுக்கு அண்ணாமலை கடும் விமர்சனம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டுள்ளதாக வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜயைச் சுற்றியுள்ளவர்கள் அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி, வழிநடத்துவதாகவும் விமர்சித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி நடத்துவோம் என உறுதியளித்த தவெக அரசு, தற்போது அழிக்க முடியாத வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடு எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.




கருத்துகள் (0)