இலக்கியம், இதழியலிலிருந்து அரசியலுக்கு வந்த கனிமொழியின் பயணம்!

இதழியல் மற்றும் தமிழ் இலக்கியத் துறைகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த கனிமொழி கருணாநிதி, 2007-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற அரசியலில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
திமுகவில் மகளிர் அணிச் செயலாளராகப் பொறுப்பு வகித்த அவர், பின்னர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் உயர்ந்தார். கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வரும் அவர், 2019 மற்றும் 2024 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அரசியல் பணிகளுடன் கலை, இலக்கியம் மற்றும் சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் கனிமொழியின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)