வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை கிடுகிடு உயர்வு – ஒரு குவிண்டால் ரூ.24,211 வரை விற்பனை!

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை கிடுகிடு உயர்வு – ஒரு குவிண்டால் ரூ.24,211 வரை விற்பனை!

ஈரோடு சந்தையில் மஞ்சளுக்கான தேவை அதிகரித்துள்ளதுடன், சந்தைக்கு வரும் மஞ்சளின் வரத்தும் குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விற்பனை அதிகரித்துள்ள நிலையில், மஞ்சள் விலை விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19,851-க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 13ஆம் தேதி அதன் விலை உயர்ந்து ரூ.22,999-ஐ எட்டியது. இந்நிலையில், நேற்றும் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் செம்மாம்பாளையம் சந்தைகளில் மஞ்சள் விலை உயர்ந்தே காணப்பட்டது.

 

இதன்படி, விரலி மஞ்சள் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.24,211 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.21,577 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. தேவை அதிகரிப்பு, வரத்து குறைவு மற்றும் பண்டிகைக் கால விற்பனை ஆகிய காரணங்களால் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.