தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – காலை 10 மணிக்கு அறிவிக்கிறார் அர்ச்சனா பட்நாயக்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நவம்பர் 12) வெளியிடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 10 மணிக்குப் பிறகு தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட உள்ளார். சென்னையில் மாநகராட்சி ஆணையர் மூலம் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள்.
இந்தப் பணிகள் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் (Special Summary Revision) கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களைப் பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளவும், தேவையான திருத்தங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு ஏற்படும்.




கருத்துகள் (0)