மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 வரை கல்வி உதவித்தொகை!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு CSR திட்டத்தின் வாயிலாக ரூ.4,500 முதல் ரூ.10,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு உதவும் வகையில் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையைப் பெற மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 40 சதவீத உடல் இயலாமை இருக்க வேண்டும். மேலும், அவர்களது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், UDID எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை கட்டாயமாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களின் தகுதிகளை ஆய்வு செய்து, உரிய விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுடைய மாணவர்கள் யாரும் திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இந்த உதவித்தொகை வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)