கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: தவெக எம்எல்ஏவை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் சிக்கிய தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை பனகல் மாளிகை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டு, சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்து உரையாற்றினார். புகாரில் தொடர்புடைய எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையே, தவெக ஆட்சிக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் சூழலிலும், அரசின் செயல்பாடுகளில் தங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் ஏற்படும் இடங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.




கருத்துகள் (0)