வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 26 வயது தொழிலாளி கைது!

திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 26 வயது தொழிலாளி கைது!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 26 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்மிக்கல் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த விஷ்ணு என்பவர், நேற்றிரவு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 

போலீசார் கைது செய்ய முயன்றபோது, விஷ்ணு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

சிகிச்சைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஷ்ணு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.