வியாழன், நவம்பர் 26, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கழுகுமலையில் வழிப்பறி மற்றும் பெண்ணுக்கு மிரட்டல்.. 2 பேர் கைது!

கழுகுமலையில் வழிப்பறி மற்றும் பெண்ணுக்கு மிரட்டல்.. 2 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி மற்றும் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்துள்ளனர்.

 

முதல் சம்பவத்தில், உடல்நலக்குறைவு காரணமாக ஹெச்லாபுரம் பேருந்து நிறுத்த நிழற்குடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வில் வித்தை பயிற்சியாளர் லட்சுமணப்பெருமாளை, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.600 பணத்தை பறித்துக்கொண்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

 

மற்றொரு சம்பவத்தில், கே.வேலாயுதபுரத்தைச் சேர்ந்த அருண்விஜய் என்பவர் பெண் ஒருவருக்கு தனது செல்போன் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும், தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த பெண் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அருண்விஜய், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இரு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட காசிராஜா மற்றும் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த அருண்விஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட மற்றொரு நபர் தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.