வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கருக்கலைப்புக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண் அளித்த வாக்குமூலம்.. மாமனார் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு!

கருக்கலைப்புக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண் அளித்த வாக்குமூலம்.. மாமனார் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 வயது இளம்பெண் ஒருவர் கருக்கலைப்பு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்களிடம் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண்ணிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, தனது கர்ப்பத்திற்கு மாமனாரே காரணம் என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

 

மேலும், கருவைக் கலைப்பதற்காக தனது கணவரும் ஆதரவாக இருப்பதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்திற்குள் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

இதையடுத்து, கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் பின்னணி, இளம்பெண் அளித்த புகாரின் உண்மைத் தன்மை மற்றும் தொடர்புடையவர்களின் பங்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.