செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
உலகம்

காங்கோவில் 66 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த ராணுவ நீதிமன்றம்!

காங்கோவில் 66 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த ராணுவ நீதிமன்றம்!

காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது போர்க்களத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட 66 ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு அந்நாட்டில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

கிழக்கு காங்கோ பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. இத்தகைய சூழலில், போரில் ஈடுபடும் வீரர்கள் தங்கள் நிலைகளைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையிலும், ராணுவ ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்தும் நோக்கிலும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.