ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கன்னியாகுமரியில் 7 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: ஒருவர் கைது!

கன்னியாகுமரியில் 7 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: ஒருவர் கைது!

 

 

கன்னியாகுமரி மாவட்டம் லெவிஞ்சிபுரம் பகுதியில் நட்சத்திர ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, சிறிய அளவிலான 7 நட்சத்திர ஆமைகளை வைத்திருந்த முகேஷ் என்பவரைக் கைது செய்தனர்.

 

பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஆமைகள் வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக வைத்திருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகள் கடத்தல் தொடர்பான கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.