சொத்து தகராறில் விபரீதம்: தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சொத்து தொடர்பான தகராறில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரையாளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிச்சமுத்துவுக்கும், அவரது மகன் ஆகாஷுக்கும் இடையே நீண்டகாலமாக சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் ஒன்றாக மது அருந்தியபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆகாஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது தந்தை பிச்சமுத்துவை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி தாலுகா போலீசார், பிச்சமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பியோடிய ஆகாஷை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)