கன்னியாகுமரியில் பயங்கர பைக் விபத்து: 13 வயது சிறுமி பரிதாப பலி!

கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம், எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீதும் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தின் போது பைக்கின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த 13 வயது சிறுமி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த 19 வயது இளைஞரும் படுகாயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)