வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 சரிவு – 3 நாட்களில் ரூ.3,520 குறைந்தது!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 சரிவு – 3 நாட்களில் ரூ.3,520 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,015-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.200 குறைந்துள்ளதால், அதன் விலை ரூ.12,815 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.1,600 சரிந்து ரூ.1,02,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரன் தங்கத்தின் விலை மொத்தம் ரூ.3,520 குறைந்துள்ளது.

 

இதற்கிடையே வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.