வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

புதுக்கோட்டை அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து – 22 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து – 22 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையில், சுமார் 50 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பட்டுக்கோட்டையில் இருந்து பழனியை நோக்கிப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 22 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பையும் சரிசெய்தனர். மேலும், அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.