வியாழன், நவம்பர் 26, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

RRB ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு.. 40 வயது வரை விண்ணப்பிக்கலாம், டிசம்பர் 4 கடைசி நாள்!

RRB ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு.. 40 வயது வரை விண்ணப்பிக்கலாம், டிசம்பர் 4 கடைசி நாள்!

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) சார்பில் பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்படிப்பு முடித்தவர்கள், தொழிலாளர் சட்டத்தில் டிப்ளமோ பெற்றவர்கள், மனோதத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் கவுன்சிலிங் படித்தவர்கள் உள்ளிட்ட தகுதியான நபர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். கல்வித்தகுதி மற்றும் பணியின் தன்மைக்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அரசு வேலை தேடும் தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

விருப்பமுள்ளவர்கள் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளுக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.400 தேர்வு நடைமுறைக்குப் பிறகு திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், அந்தத் தொகை முழுவதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.