ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர் வேலை.. B.Sc Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவசரகால மகப்பேறு சிகிச்சை மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகளில் பணியாற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணிகளுக்கு B.Sc Nursing படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர் பணியில் ஆர்வமுள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், கேணிக்கரை, ராமநாதபுரம் – 623501 என்ற முகவரிக்கு நேரடியாகச் சென்று வழங்கலாம் அல்லது தபால் மூலமாகவும் அனுப்பலாம்.
அரசு மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்ற விரும்பும் B.Sc Nursing பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.




கருத்துகள் (0)