பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஃபெடரல் வங்கியில் வேலைவாய்ப்பு 2026!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஃபெடரல் வங்கியில் (Federal Bank), Sales Officer மற்றும் Area Sales Manager ஆகிய பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
- நிறுவனம்: ஃபெடரல் வங்கி
- பணியிடங்கள்: Sales Officer, Area Sales Manager
- காலிப்பணியிடங்கள்: பல்வேறு
- கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு
- வயது வரம்பு: 21 முதல் 42 வயது வரை
- சம்பளம்: பணியிடத்திற்கும், தகுதி மற்றும் அனுபவத்திற்கும் ஏற்ப நிர்ணயிக்கப்படும்
- தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 23, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வேலைக்காக முயற்சி செய்து வரும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.




கருத்துகள் (0)